1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (17:06 IST)

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம்: தனியார் மருத்துவமனைகளுக்கு முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை

தமிழகத்தில் கொரனோ தோற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்த அறிவிப்புகள் ஏற்கனவே வெளியாகி உள்ளது. ஆனால் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணங்கள் வாங்குவதாக ஒருசில தனியார் மருத்துவமனை மீது புகார்கள் எழுந்தன
 
நேற்று கூட சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவரிடம் 19 நாட்கள் சிகிச்சை செய்வதற்காக 12 லட்ச ரூபாய் கட்டணம் வசூலித்ததாக பரபரப்பு தகவல்கள் வெளிவந்தன. இதனை அடுத்து தமிழக சுகாதாரத் துறை எடுத்த அதிரடி நடவடிக்கையால் அந்த மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை செய்யும் உரிமையை ரத்து செய்யப்பட்டது 
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரம் தெளிவாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும். கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.