தமிழக ஆளுநருக்கு கொரோனாவா!? – மருத்துவமனையில் பரிசோதனை!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில், தற்போது ஆளுனருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதா என சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் சிலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தமிழக கவர்னரின் ராஜ்பவன் மாளிகையில் பணி செய்து கொண்டிருந்த ஊழியர்களில் 3 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது
இதனால் ஆளுநர் பன்வாரிலால் புரோக்கித்திற்கும் இன்று மருத்துவமனையில் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆளுனர் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனைக்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆளுநர் 7 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.