செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (12:20 IST)

உத்தரபிரதேச மாநில பெண் அமைச்சர் கொரோனாவுக்கு பலி: முதல் யோகி ஆதித்யநாத் இரங்கல்

உத்தரபிரதேச மாநில பெண் அமைச்சர் கொரோனாவுக்கு பலி
உத்தரபிரதேச மாநிலத்தின் அமைச்சர் ஒருவர் கொரோனாவுக்கு வெளியாகியுள்ளதாக வெளிவந்த செய்தியை அடுத்து அவருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்
 
உத்தரபிரதேச மாநில தொழில்நுட்ப கல்வி அமைச்சர் கமல் ராணி என்பவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் 
 
இந்த நிலையில் திடீரென அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண் அமைச்சர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
முதல்வரை அடுத்து பிரதமர் மோடியும் தனது டுவிட்டரில் கமல் ராணிஅவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது