செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 24 ஜூன் 2020 (17:46 IST)

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் உடல்நலக்குறைவால் இறந்தனர்; முதல்வர் அறிக்கை

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் உடல்நலக்குறைவால் இறந்தனர்
சாத்தான்குளம் தந்தை, மகன் ஆகிய இருவரும் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் இருவரும் மர்மமாக மரணம் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நீதி விசாரணை வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 
இந்நிலையில்‌, 22.06.2020 அன்று இரவு 7.35 மணிக்கு சிறையில்‌ இருந்த திரு.பென்னிக்ஸ்‌ தனக்கு மூச்சுத்திணறல்‌ ஏற்படுவதாக கூறியதையடுத்து, சிறைக்‌ காவலர்கள்‌ திரு.பென்னிக்சை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில்‌ சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்‌. திரு.பென்னிக்ஸ்‌ சிகிச்சை பலனின்றி இரவு 9.00 மணியளவில்‌ உயிரிழந்துள்ளார்‌.
 
இந்நிலையில்‌, 23.06.2020 அன்று அதிகாலை சிறையில்‌ இருந்த திரு.பென்னிக்சின்‌ தந்தை திரு.ஜெயராஜ்‌ தனக்கு உடல்‌ நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததையடுத்து, சிறை காவலர்கள்‌ அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில்‌ சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்‌. சிகிச்சையில்‌ இருந்த திரு.ஜெயராஜ்‌ அன்று காலை 5.40 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்‌.
 
இவ்வாறு முதல்வரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது