12 பாஜக எம்.எல்.ஏ-க்கள் ஒரு வருடத்திற்கு சஸ்பெண்ட்!

Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 6 ஜூலை 2021 (08:18 IST)
மகாராஷ்டிரா சட்டபையில் அமளியில் ஈடுபட்ட 12 பாஜக எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். 

 
மகாராஷ்டிரா சட்டபையில் சபையை வழி நடத்திய தற்காலிக சபாநாயகர் பாஸ்கர் ஜாதவுக்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியுள்ளனர். மேலும் கடுமையான வாக்குவாதத்திலும் அமலியிலும் ஈடுப்பட்டுள்ளனர். 
 
சபாநாயகர் பல முறை அமைதி காக்கும் படி கோரியும் பாஜக உறுப்பினர் கூச்சல் குழப்பத்தை கைவிடாததால் அமளியில் ஈடுபட்ட 12 பாஜக எம்எல்ஏக்களை ஒரு வருடத்திற்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :