23 ஆம் தேதி தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல்!

Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (14:09 IST)
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் வருகின்ற 23 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று அறிவிப்பு. 

 
ஆம், பிப்ரவரி 23 ஆம் தேதி தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார். இந்த இடைக்கால பட்ஜெட்டுக்கு தமிழக அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.
 
தேர்தல் காலம் என்பதால் இந்த இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள் குறிப்பாக மக்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான திட்டங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :