புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (12:34 IST)

நாம் தமிழரில் இருந்து திமுகவுக்கு வந்த தொண்டர்கள்! – அறிவாலயத்தில் கூட்டம்!

நாம் தமிழரில் இருந்து திமுகவுக்கு வந்த தொண்டர்கள்! – அறிவாலயத்தில் கூட்டம்!
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 500க்கும் அதிகமானோர் திமுகவில் இணைந்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி ஆகியோர் கட்சியில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நா.த.கவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

இந்நிலையில் அதை தொடர்ந்து அவர்களது ஆதரவாளர்கள் 500 பேர் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி இன்று அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தொண்டர்கள் பலர் கட்சி மாறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.