செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 26 டிசம்பர் 2019 (09:36 IST)

அந்த பயம் இருக்கணும்! பாஜகவும் ஸ்டாலினும் மாறி மாறி பதிவு செய்த டுவிட்டுக்கள்!

அந்த பயம் இருக்கணும் என்றும் பாஜகவின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்திலும், திமுக தலைவர் முக ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்திலும் மாறி மாறி பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
பெரியாரின் பிறந்த நாள் அன்று  பாஜகவின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஒரு சர்ச்சைக்குரிய டுவிட் பதிவு செய்யப்பட்டது. இதற்கு முதல் ஆளாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவிக்க பின்னர் அந்த பதிவு நீக்கப்பட்டு அதன் பின்னர் அதற்கு பதிலாக வேறொரு டுவிட்டை பாஜக பதிவு செய்தது. இதன்பின்னர் முக ஸ்டாலின், ‘பெரியாரை இழிவுபடுத்தும் கருத்தைப் பதிவு செய்து, எதிர்ப்பு வந்ததும் நீக்கியுள்ளது  தமிழக பாஜக. அப்பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே? அந்த பயம் இருக்கட்டும்! மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார்! அதிமுக, இதற்காவது புலியாகப் பாயுமா? இல்லை மண்புழுவாய் பதுங்குமா? என்று பதிவு செய்திருந்தார்
 
இந்த நிலையில் முக ஸ்டாலினின் இந்த டுவிட்டிற்கு பதிலடி கொடுத்த தமிழக பாஜக, ‘விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து, பின்னர் திராணி இன்றி பயந்து நீக்கியவர், பயம் பற்றி அந்த பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே? இந்துக்கள் என்றாலே மிரண்டு விடுகிறீர்கள் போலும். அந்த பயம் இருக்கணும்’ என்று பதிவு செய்துள்ளது.
 
மொத்தத்தில் பாஜகவும் திமுக தலைவரும் ‘அந்த பயம் இருக்கணும்’ என்று மாறி மாறி டுவிட்டுக்களை பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது