சச்சினின் பாதுகாப்பு நீக்கம் … முதல்வர் மகனுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு – சிவசேனா அதிரடி முடிவு !

Last Modified வியாழன், 26 டிசம்பர் 2019 (09:00 IST)
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள 97 முக்கியப் புள்ளிகளின் பாதுகாப்புகள் மறுபரிசீலனை செய்யப்பட்டு மாற்றப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த 97 முக்கிய புள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு மறுபரிசீலனை செய்துள்ளது மாநில அரசான சிவசேனா. உளவுத் துறை அளித்த பரிந்துரைகளின் பேரில் இந்த பாதுகாப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கிரிக்கெட் ஜாம்பவான் மற்றும் முன்னாள் மாநிலங்களவை எம்பி, சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்ட எக்ஸ் பிரிவு பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவருடன் எந்நேரமும் இருந்த பாதுகாவலர் திரும்ப அழைக்கப் பட்டுள்ளார். ஆனால் அவர் வெளியில் செல்லும் போது பாதுகாவலர் வேண்டுமென எனக் கோரினால் பாதுகாப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவுக்கும் அன்னா ஹசாரேவுக்கும் வழங்கப்பட்ட  ஒய் ப்ளஸ் பாதுகாப்பு இசட் ப்ளஸ் பாதுகாப்பாக உயர்த்தப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :