காஷ்மீர் விவகாரம்: ஜகா வாங்கிய ஸ்டாலின்; பங்கமா வச்சு செய்யும் தமிழிசை!

Last Modified சனி, 24 ஆகஸ்ட் 2019 (10:38 IST)
திமுக தலைவர் ஸ்டாலின் காஷ்மீர் விவகாரத்தில் மாற்றி பேசியதை பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேலி செய்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 
 
மத்திய அரசு சமீபத்தில் காஷ்மீரில் 370 என்ற சிறப்பு அந்தஸ்து பிரிவை நீக்கியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை திமுக கடுமையாக எதிர்த்தது. 
 
இந்த நிலையில் சமீபத்தில் திமுக எம்பிக்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் டெல்லியில் இந்த சட்டப்பிரிவை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். 
இந்நிலையில் காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது தவறு என டெல்லியில் போராடவில்லை என்றும், கையாண்ட விதம்தான் தவறு என்றும் முறையாக இந்த சட்ட நீக்கம் அமல்படுத்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டவே போராடினோம் என்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசினார்.
stalin
காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை நீக்கியதற்கு ஆரம்பம் முதல் திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது ஸ்டாலின் மாற்றி பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், பாஜக தலைவர் தமிழிசை டிவிட்டரில் ஸ்டாலினை கலாய்த்து பதிவிட்டுள்ளார். தமிழிசையின் பதிவு பின்வருமாறு, 
 
370 பிரிவு ரத்தானதற்கு எதிராக டில்லியில் போராடவில்லை. அதை செயலாக்கியவிதம் சரியில்லை என்றே போராடினோம் - ஸ்டாலின். அரசியல் சட்டத்தை எரிக்க வில்லை, பேப்பரைத்தான் எரித்தோம்; இந்தியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்; 
tamilisai
இது போன்ற திமுகவின் வழக்கமான பழைய டயலாக் நினைவுக்குவருதே... ரயில் வராத தண்டவாளத்தில் தலைவைத்து போராடிய வீரர்கள்? என ஸ்டாலினையும் கட்சியினரையும் சீண்டியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :