புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (15:13 IST)

முத்தலாக் வழக்கு – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் !

முத்தலாக் மசோதாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசை பதிலளிக்க சொல்லி உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இஸ்லாமிய சமூகத்தினரிடம் வழக்கத்தில் இருக்கும் முத்தலாக் விவாகரத்து முறைக்கு எதிராக மசோதா கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது இரு அவைகளிலும் நிறைவேறியது. இதற்குக் குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்ததை அடுத்து இரு சட்டமாக இயற்றப்பட்டது. அதன் படி முத்தலாக் சொல்வோர்க்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கபடும் என அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சமஸ்தா கேரள ஜமாய்துல் உலமா, ஜமாத் உலமா இ ஹிண்டு ஆகிய அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தன. அதில் முஸ்லிம் கணவர்களுக்குத் தண்டனை வழங்கும் முறை எனக் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு மீதான விசாரணையின் போது குழந்தை திருமணம், வரதட்சனை போன்ற இந்து மத வழக்கங்களில் குற்றவாளிகாக கருதப்படுகின்றனர். அதுபோல முத்தலாக் சொல்பவர்களும் ஏன் குற்றவாளிகளாகக் கருதப்படக் கூடாது எனக் கேள்வி எழுப்பினர். மேலும் இந்த மனுக்களுக்கு மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.