1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 18 ஏப்ரல் 2022 (17:59 IST)

மோடிக்கு ஆதரவு பேச்சு - இளையராஜாவிற்கு பாரத ரத்னா?

இளையராஜாவிற்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை. 
 
பிரதமர் மோடி குறித்த புத்தகம் ஒன்றிற்கு முன்னுரை எழுதிய பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, அதில் பிரதமரின் திட்டங்களை அம்பேத்கருடன் ஒப்பிட்டு கருத்து கூறியிருந்தார். இதற்கு பலரும் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.  இளையராஜா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி வருவதற்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்தார். 
 
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமீபத்திய பேட்டியில், குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கும் ராஜ்யசபா உறுப்பினர்களுக்கும் பாஜகவிற்கும் சம்பந்தம் இல்லை. இளையராஜா பாஜகவை சார்ந்தவர் அல்ல. எனவே பாஜகவின் சார்பில், ராஜ்யசபா எம்பி ஆக்குவார்கள் என சொல்ல முடியாது. 
 
இளையராஜாவிற்கு எம்பி பதவி கொடுத்து அடக்கிவிட வேண்டாம். இளையராஜாவிற்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என்றும், அதற்கு அவர் பொருத்தமானவர். இதுகுறித்து தேவைப்பட்டால் பாஜக தலைமைக்கு கடிதம் எழுத தமிழக பாஜக தயாராக உள்ளது என்றும் அண்ணாமலை கூறினார்.