என்.டி.ஏ கூட்டணியில் விஜய்?.. அண்ணாமலை பரபரப்பு பேட்டி!...
நடிகராக இருந்த விஜய் தமிழக வெற்றிk கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியல்வாதியாக மாறிவிட்டார். அவருக்கு இன்று பெரிய ரசிகர் கூட்டமும் மக்கள் ஆதரவும் இருக்கிறது.. கரூர் சம்பவத்தின் போது கூட அந்த ஊர் மக்கள் மட்டுமில்லாமல்.. தமிழகத்தில் உள்ள பல பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்கள்.
அதேபோல் ஒவ்வொரு முறை தவெக மாநாடு நடக்கும்போதும் அவரை பார்க்க பல ஆயிரம் மக்கள் கூடுகிறார்கள்.. எனவே விஜய்க்கு மக்களிடம் ஆதரவு இருப்பதை ஆளுங்கட்சியும் உணர்ந்திருக்கிறது.
இதை புரிந்து கொண்டதால்தான் அதிமுக பாஜக கூட்டணியில் விஜயை இழுக்கும் முயற்சிகளும் நடந்தது.. ஆனால் விஜய் பிடி கொடுக்கவில்லை.. இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்தித்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஜனநாயகன் படத்தை பார்க்க ஆவலுடன் இருந்த ரசிகர்களில் நானும் ஒருவன். தணிக்கை சான்றிதழ் சர்ச்சையை நானும் கவனித்து வருகிறேன்.. எல்லா திரைப்படங்களும் கடந்து வருகிற பாதைதான் இது.. படம் பார்க்காமல் என்ன தவறு என்பதை என்னால் சொல்ல முடியாது..
விஜயை என்.டி.ஏ கூட்டணியில் சேர்ப்பது குறித்து என்.டி.ஏ அணியின் கோச் மற்றும் கேப்டன்தான் முடிவு செய்வார்கள். நான் வெறும் பார்வையாளன்தான்.. இந்திய கிரிக்கெட் அணி போல என்.டி.ஏ கூட்டணி வலிமையாக உள்ளது.. அதேநேரம் வலிமையாக உள்ளவர்களை அணியில் சேர்க்க வேண்டும் என்பதே எனது கருத்து என சொல்லியிருக்கிறார்.
அதாவது திமுகவை வீழ்த்த அதிமுக-பாஜக கூட்டணியில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தையும் இணைக்க வேண்டும் என மறைமுகமாக கருத்து சொல்லியிருக்கிறார் அண்ணாமலை.