செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 22 செப்டம்பர் 2022 (10:46 IST)

அண்ணாமலையின் உதவியாளர் திடீர் கைது: பாஜகவில் பரபரப்பு

annamalai
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் திடீரென தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பாஜகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறித்து அவதூறாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் போஸ்டர் ஒட்டியதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்
 
வடசென்னை பகுதியில் பல்வேறு தெருக்களில் தமிழக முதலமைச்சரை அவதூறாக சித்தரிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்ததாகவும் இதில் அண்ணாமலையின் உதவியாளர் பெயர் இருந்ததாகக் கூறப்படுகிறது
 
இதனை அடுத்து இதுகுறித்து திமுகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் அண்ணாமலையின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார் 
 
மேலும் இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.