நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை !!

Sugapriya Prakash| Last Modified ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (14:48 IST)
கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை சென்னை கூடுகிறது. 
 
தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கை கூட்டத் தொடர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அதன்பின்னர் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஜார்ஜ் கோட்டைக்கு பதிலாக கலைவாணர் அரங்கில் பேரவை கூட்டம் நடைபெறுகிறது.
 
தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக இந்தக் கூட்டத்தொடர் 14, 15, 16 ஆகிய 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :