வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (13:21 IST)

மெட்ரோ ரயில் டிக்கெட் மீது 50% ஆஃபர்!!

பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக மெட்ரோ ரயில்களில் கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையில் கடந்த 7 ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகிறது என்பது தெரிந்ததே. முதல் கட்டமாக விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. அதன் பின்னர் சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலான மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது.  
 
அதேபோல காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மெட்ரோ ரயில் பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து முதல் 9 மணி வரையில் அனைத்து வழிதடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக மெட்ரோ ரயில்களில் கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம், ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினங்களில் மெட்ரே ரயில் பயணத்திற்கு 50 சதவிகித கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல மொபைல் அப்ளிகேஷன் மூலம் டிக்கெட் எடுப்பவர்களுக்கு 20 சதவிகித கட்டண சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.