1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu had rainfall in upcoming 2 days

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

Tamilnadu
தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மழை பெய்து வரும் நிலையில் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் நாளையும் நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி மற்றும் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
இப்படிதான் நம்பிக்கைய சோதிப்பியா? காதலியை கட்டி வைத்து கார் ஓட்டிய நபர்! – வைரலான வீடியோவால் நடவடிக்கை!