ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (09:58 IST)

தென்னிந்தியா புறக்கணிப்படுவதால் தனிநாடு கோரிக்கை.. துணை முதல்வர் சகோதரர் பேச்சால் பரபரப்பு..!

தென்னிந்தியா தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் தென்னிந்தியாவை ஒருங்கிணைத்து தனி நாடு கேட்கும் நிலை ஏற்படும் என கர்நாடக மாநில துணை முதல்வர் டி கே சிவக்குமாரின் சகோதரர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

நேற்று  நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் தென்னிந்திய மாநிலங்களின் வருவாய் அள்ளி கொடுக்கப்பட்டாலும் பாரபட்சம் நீடிக்கிறது என டி கே சிவக்குமாரின் சகோதரர் டிகே சுரேஷ் கூறியுள்ளார். இதே நிலை நீடித்தால் தென்னிந்திய மாநிலங்கள் தனிநாடு கூறும் நிலைமை உருவாகும் என்று எச்சரித்தார். ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார் காங்கிரஸ் கட்சியின் கொள்கை தனி நாடு கேட்பது அல்ல என்று தெரிவித்தார்.


இதே கருத்தை முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் அவர்களும் தெரிவித்துள்ளார். தனி நாடு என்பது காங்கிரஸ் கொள்கை அல்ல என்றும் காங்கிரஸ் கட்சி தென்னிந்திய மாநிலங்களை உள்ளடக்கிய தனிநாடு கோரவில்லை என்றும்  அவர் தெரிவித்தார்.

Edited by Mahendran