திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: புதன், 22 ஆகஸ்ட் 2018 (20:14 IST)

திமுகவில் என்னை இணைப்பது போல் தெரியவில்லை - அழகிரி

திமுக தலைவர் கருணாநிதி மறைந்த பின்னர் கட்சி இரண்டாக உடையாமல் காப்பாற்ற மு.க.அழகிரி கட்சியில் மீண்டும் இணைத்து கொள்ளப்படுவார் என்றும் அழகிரியை பகைத்து கொண்டு தென் தமிழகத்தில் திமுக பெரிய வெற்றியை பெற முடியாது என்றும் அரசியல் விமர்சகர்கள் கணித்திருந்தனர்.
 
ஆனால் சமீபத்தில் திமுகவில் நடைபெற்று வரும் சம்பவங்களை பார்த்தால் அழகிரியை திமுகவில் திரும்ப சேர்த்து கொள்வதற்கான அறிகுறியே தெரியவில்லை. இந்த நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி கருணாநிதி நினைவிடத்தில் அமைதிப்பேரணி நடைபெறும் என்று மு.க.அழகிரி அறிவித்தார். இந்த அறிவிப்பு திமுக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில் இன்று மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்த மு.க.அழகிரி, 'திமுகவில் என்னை இணைப்பது போல் தெரியவில்லை என்றும், நேரம் வரும்போது என் மனக்குமுறலை மக்களிடம் வெளிப்படுத்துவேன்' என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் சென்னையில் செப்டம்பர் 5ஆம் தேதி கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதி பேரணி அமைதியாக நடைபெறும் என்றும் இந்த அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.