1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 22 ஆகஸ்ட் 2018 (19:06 IST)

2 பதவி, 3 பேர்: யார் யாருக்கு என்னென்ன? குழப்பத்தில் ஸ்டாலின்!

திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 28 ஆம் தேதி செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தின் போது தேர்தல் நடத்தி, திமுக பதவிகள் யார் யாருக்கு வழங்கப்பட உள்ளது என்பது தெரிய வரும். 

 
திமுக தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. மேலும், திமுக விதிமுறைகளின்படி தேர்தல் மிகவும் ஜனநாயக முறைப்படி நடக்கும் என தெரிகிறது. தலைவர் பதவிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும், மிகவும் சிக்கலாக இருப்பது பொருளாளர் பதவிதான். 
 
பொருளாளர் பதவி போட்டியில் நேற்று வரை துரைமுருகன் மற்றும் கனிமொழி பெயர் அடிப்பட்டது தற்போது இன்று இதில் ஆ.ராசாவின் பயரும் இடம்பெற்றுள்ளதாம். இதனால் மிகவும் குழப்பத்தில் உள்ளாராம் ஸ்டாலின். 
 
ஏற்கனவே கட்சியில் அழகிரி சலசலப்பை ஏற்படுத்தியதால், கனிமொழியை பகைத்துக்கொள்ள விரும்பாத ஸ்டாலின் திமுகவில் துணை பொதுச்செயலாளர் என்ற பதவியை அவருக்கு வழங்க உள்ளதாக தெரிகிறது.
 
பொறுத்திருந்து பாட்ப்போம் பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகளை...