நாளை பெளர்ணமி.. திருவண்ணாமலை கிரிவலம் செய்ய உகந்த நேரம் எது?
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று திருவண்ணாமலையைச் சுற்றி ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்பது தெரிந்ததே
அந்த வகையில் நாளை வெள்ளிக்கிழமை பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கிரிவலம் செல்வதற்கு உகந்த நேரம் எது என்பது குறித்து ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
நாளை அதிகாலை 2 மணிக்கு கிரிவலத்தை தொடங்கி நாளை மறுநாள் 4:20 மணிக்குள் கிரிவலத்தை முடிக்க வேண்டும் என்றும் இந்த நேரத்தில் கிரிவலம் சென்றால் பக்தர்களுக்கு ஏராளமான நன்மை கிடைக்கும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலையை சிவனாகக் கருதி வழிபடுவதால் பக்தர்கள் கிரிவலம் சென்றால் மிகுந்த பயன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran