1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 25 ஜனவரி 2023 (11:40 IST)

பயணிகள் மது கேட்டால் மறுக்க வேண்டும்: பணியாளர்களுக்கு ஏர் இந்தியா அறிவுறுத்தல்

airindia
பயணிகள் கூடுதலாக மது கேட்டால் பணியாளர்கள் மறுக்க வேண்டும் என ஏர் இந்தியா தனது பணியாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் ஏர் இந்தியா விமானத்தில் மது போதையில் பயணி ஒருவர் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் ஏர் இந்தியா விமானத்தில் இனி மது அருந்து விட்டு வரும் பயணிகள் அடையாளம் காணப்பட வேண்டும் என புதிய விதி அறிவிக்கப்பட்டுள்ளது 
 
விமானத்தில் எவ்வளவு மது கொடுக்கப்படுகிறதோ, அந்த அளவு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என்றும், கூடுதலாக மதுவை கேட்டால் மறுக்க வேண்டும் என்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மது தொடர்பான கொள்கையில் ஏர் இந்தியா சில சீர்திருத்தங்களை அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran