திருவண்ணாமலை மலை மீது பறந்த ட்ரோன்.. ரஷ்ய இளைஞரிடம் போலீஸ் விசாரணை!
திருவண்ணாமலை மலை மீது பறந்த ட்ரோன்.. ரஷ்ய இளைஞரிடம் போலீஸ் விசாரணை!
திருவண்ணாமலை தீப மலையின் மீது திடீரென மர்மமான ட்ரோன் ஒன்று பறந்த நிலையில் அது குறித்து போலீசார் விசாரணை செய்தபோது ரஷ்ய இளைஞர் ஒருவரை விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருவண்ணாமலை மீது அனுமதி இன்றி ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அனுமதி இன்றி தீபமலை மீது ட்ரோன் பறக்க விட்ட அவரிடம் விசாரணை நடந்து வரும் நிலையில் மேலும் சில தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ரஷ்ய இளைஞருக்கு திருவண்ணாமலையின் புனிதம் குறித்து தெரியாது என்றும் அவர் தற்செயலாக இது ஒரு சாதாரண மலை என்று நினைத்து ட்ரோனை வானில் பறக்க விட்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது
இந்த நிலையில் ரஷ்ய இளைஞரிடம் மேலும் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன
Edited by Mahendran