மாணவர்களை வைத்து போஸ்டர் ஒட்டியக் கல்லூரி – கடுப்பான பொதுமக்கள் !

Last Modified செவ்வாய், 9 ஜூலை 2019 (13:09 IST)
திருவண்ணாமலை அருகே உள்ள கல்வி நிறுவனம் தங்கள் கல்லூரியின் விளம்பரத்துக்காக மாணவர்களைப் பயன்படுத்தியது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் எனும் பகுதியில் உள்ளது அந்த ஐடிஐ தொழிற்பயிற்சி நிறுவனம். இந்த பயிற்சியகத்தின் நிர்வாகம் தங்கள் கல்லூரியை விளம்பரப்படுத்துவதற்காக ஊரெங்கும் மாணவர்களை போஸ்டர் ஒட்ட சொல்லியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் ஒரு நாளுக்கு இத்தனை போஸ்டர் வீதம் ஒட்டவேண்டுமென்று கட்டளையிட்டுள்ளனர். இதனால் மாணவர்கள் அறக்கப் பறக்க இரு சக்கர வாகனங்களில் சென்று போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இதைக்கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் இது சம்மந்தமாக பெற்றோர் சிலரும் கல்வி நிறுவனத்தில் புகார் அளித்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :