புதன், 4 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 5 ஜூலை 2019 (11:27 IST)

நம்ம அருண் விஜய்யா இது?- பாக்ஸர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

அருண் விஜய் நடித்து வெளிவர இருக்கும் “பாக்ஸர்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. போஸ்டரை பார்த்து “அட நம்ம அருண் விஜய்யா இது?” என்று ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்து போயுள்ளனர்.

தமிழில் இயற்கை, பாண்டவர் பூமி போன்ற படங்களில் நடித்தவர் அருண் விஜய். அருண்குமார் என்ற பெயரில் முறைமாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர், “மாஸ் ஹீரோ” ஆக நடிக்க தொடங்கியதும் தனது பெயரை “அருண் விஜய்” என்று மாற்றிக்கொண்டார்.

சமீப காலமாக அதிக படவாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தவருக்கு “என்னை அறிந்தால்” படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. சமீபத்தில் “தடம்” படம் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் தொடர்ந்து மூன்று படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்றான “மாஃபியா” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியான நிலையில், அவரது மற்றொரு படமான “பாக்ஸர்” படத்தின் போஸ்டர் இன்று வெளியாகியிருக்கிறது.

பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விவேக் இயக்கும் இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக “இறுதி சுற்று” நாயகி ரித்விகா சிங் நடிக்கிறார். இந்த படத்தின் பாக்ஸிங் காட்சிகளுக்காக வியட்நாம் போய் பயிற்சி எடுத்திருக்கிறார் அருண் விஜய். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வந்தன.

தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டரில் பாக்ஸிங் மேடையில் அருண் விஜய் இருப்பது போல ஒரு போச்டரும், ரித்விகா சிங்குடன் அடிப்பட்ட நிலையில் இருப்பது போல ஒரு போஸ்டரும் வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அருண் விஜயின் இந்த கெட் அப் சூப்பராக உள்ளதாக தெரிவித்துள்ளார்கள். இந்த படம் இந்த வருடத்தில் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.