செம்ம மாஸ் "பிகில்" போஸ்டர்! படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Last Modified வெள்ளி, 5 ஜூலை 2019 (19:44 IST)
தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் தளபதி விஜய்யின் பிகில் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் , செகண்ட் லுக் போஸ்டர் என அடுத்தடுத்து வெளிவந்து விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. 


 
மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் கால்பந்தாட்ட வீரராக மகன் விஜய், மற்றும் ராயப்பன் என்ற அப்பா கதாபாத்திரத்தில் மற்றொரு விஜய் என இரட்டை வேடங்ககளில் விஜய் நடிக்கும் பிகில்  படத்தின் அப்டேட்டுகளை படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் வெளியிட்டிருந்தார். 


 
விஜய் பிறந்த நாளில் இந்த இரண்டு போஸ்டர்களை சமூகவலைகளங்களில் அதிக அளவில் ஷேர் செய்து விஜய் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்நிலையில் ரசிகர்கள் பலர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி ஃபேன் மேட் போஸ்டர்களை உருவாக்கி வெளியிட்டு வருகிறார்கள். தற்போது பிகில் படத்தின் படக்குழுவும் அதை மிகவும் வரவேற்றுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :