செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 31 ஜனவரி 2020 (11:04 IST)

திருவண்ணாமலை பொறியாளருக்கு கொரோனா வைரஸ்? – சிறப்பு வார்டில் சிகிச்சை

தமிழகத்தில் திருவண்ணாமலையை சேர்ந்த சாஃப்ட்வேர் பொறியாளர் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வுகான் மாகாணத்திலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியுள்ளது. வேகமாக பரவி வரும் இந்த வைரஸால் சீனாவில் இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.

இதனால் சீனாவிலிருந்து தங்கள் நாட்டு மக்களை மற்ற நாடுகள் விமானங்களை அனுப்பி திருப்பி அழைத்துக் கொண்டு வருகின்றன. இந்நிலையில் சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சீனாவில் இருந்து திருவண்ணாமலை திரும்பிய சாஃப்ட்வேர் எஞ்சினியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவருக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழ்நாட்டிற்குள்ளும் கொரோனா பதட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.