செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 30 ஜனவரி 2020 (17:56 IST)

ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை!! ஆதாரமின்றி அவதூறு பரப்புவோர் கண்காணிப்பு

சமூக வலைத்தளங்களில் ஆதாரமின்றி அவதூறு பரப்புவோரை கண்காணிக்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது

வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தற்போது பெரும்பான்மையானோர் பல்வேறு நோக்கத்துக்காக உபயோகப்படுத்துகின்றனர். எனினும் ஆதாரமின்றி பரவும் பல்வேறு செய்திகள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. குறிப்பாக உயர் பதவிகளில் இருப்பவர்கள் மீது ஆதாரமில்லாமல் அவதூறு பரப்புவது தொடர்ந்துக் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆதாரமில்லாமல் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் எனவும், குறிப்பாக உயர் பதவிகளில் இருப்பவர்கள் மீது ஆதாரமில்லாமல் அவதூறு பரப்புவோரை கண்காணிக்க தனி பிரிவு அமைக்கப்பட வேண்டும் எனவும் தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.