திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 31 ஜனவரி 2020 (06:58 IST)

திருச்சி பாஜக பிரமுகர் கொலை:பின்னணியில் காதல்? - கொலையாளிகள் கைது !

திருச்சியில் பாஜக செயலாளராக இருந்த விஜயரகு கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளி மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்ட பாஜக கட்சியில் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தவர் விஜயரகு. இவர் தீவிரமாக பாஜகவுக்காக செயலாற்றி வந்தவர் என சொல்லப்படுகிறது. கடந்த ஜனவரி 27 ஆம் தேதி காலை வழக்கம் போல காந்தி மார்க்கெட் பகுதிக்கு சென்றவரை மர்ம கும்பல் ஒருவர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவத்தில் அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்நிலையில் விஜயரகுவுக்கு அஞ்சலி செலுத்திய பாஜக தலைவர்கள் கொலைக்கு பின்னால் இஸ்லாமிய தீவிரவாதிகள் இருப்பதாக சொல்ல அதைக் காவல்துறை மறுத்தது. இந்நிலையில் கொலைக்குக் காரணமான மிட்டாய் பாபு மற்றும் அவரது நண்பர்களான சுடர்வேந்தன்,சச்சின் சஞ்சய் ,யாசர் ஆகியோரை நேற்று கைது செய்துள்ளனர். அவர்களை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

மிட்டாய் பாபு விஜயரகுவின் வீட்டுக்கு அருகில் வசித்து வந்ததாகவும் அவரது பெண்ணைக் காதலித்தால் ஏற்பட்ட முன்பகைக் காரணமாகவும் இந்த கொலை நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.