திருப்பூர் எம்.பி சத்தியபாமாவின் கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடர் செயல்பாடுகள் பின்வருமாறு..
1)நெசவுத் தொழில்:
*ஆயிரக்கணக்கான கைத்தறி நெசவாளர்களின் நலனை பாதுகாக்க பவானி ஜமக்காளத்தை ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு அளித்தல்.
*விசைத்தறி துறை சார்ந்தவர்களுக்கு எந்தவித சிரமமும் இன்றி முத்ரா திட்டக் கடன்கள் கிடைக்கத் தேவையான அறிவுறுத்தல்களை வங்கிகளுக்கு வழங்குதல்.
2)விவசாயம்/வேளாண்மை:
வேளாண்மைக்காக செய்யப்படும் ஆழ்குழாய் கிணறு தோண்டும் மற்றும் துளையிடும் ரிக் (RIG) பணிகளுக்கு சரக்கு மற்றும் சேவை GST வரியிலிருந்து விலக்கு அளித்தல்.
3)தொழில் வளர்ச்சி:
*சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வாராக்கடன் கால அவகாசத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்தல்.
*சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக பிரத்யேகமான BASEL3 விதிமுறைகளுக்குப் பதிலாக உரிய திட்டத்தை வகுத்தல்.
*முன்கூட்டியே அனுமதி பெறும் திட்டத்தின் கீழ் இறக்குமதித் தீர்வை விவரங்களை சமர்ப்பிக்கும் ஏற்றுமதியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி தொகையை திரும்பப் பெறுவதற்கான கிளெய்ம்களை மேற்கொள்ள அனுமதித்தல்.
*ஜிஎஸ்டி (GST) தொகையை திரும்பப்பெறும் விவரங்களை ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்யும் வசதி.
4)பின்னலாடைத் துறை:
*ஜவுளித்துறைக்கான தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியத்திலிருந்து விடுவிக்கப்படவேண்டிய நிலுவைத்தொகை 8000 கோடி ரூபாயை உடனடியாக விடுவித்தல்.
*சுற்றப்பட்ட நூலிழை உற்பத்தி குறித்து நூற்பாலைகள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுபாட்டை 40% சதவிகிதத்திலிருந்து 10% சதவிகிதமாகக் குறைத்தல்.
5)போக்குவரத்துத் துறை:
i)ரயில் போக்குவரத்து:-
*திருப்பூர் ரயில் நிலையத்தில் கீழ்க்கண்ட வசதிகளை பயணிகளின் நலனுக்காக வழங்க வேண்டுதல்:
*முழுவதும் வேயப்பட்ட கூரையுடன் கூடுதல் நடைமேடை.
*கூடுதல் டிக்கெட் புக்கிங் கவுண்டர்.
*எல் இ டி திரை வசதியுடன் கூடிய ரயில் பெட்டிகள் வருவது மற்றும் செல்வது குறித்த டிஜிட்டல் வசதிகள்.
*மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக பேட்டரியால் இயங்கும் கார் வசதி.
*ரயில் பற்றிய தகவல்களை வழங்கும் உதவி மையம் மற்றும் தானியங்கி கியோஸ்க் வசதி.
*ரொக்கப்பண ஏடிம் வசதி.
*குடிநீர் வழங்கும் இயந்திரங்கள்.
*திருப்பூரில் கீழ்க்கண்ட ஏழு ரயில்வண்டிகள் ரயில் நிலையத்தில் நின்று செல்லவேண்டி கோரிக்கை:
*ரயில் வண்டி எண்கள் 22877/22878 ஹெளரா-எர்ணாகுளம் அந்த்யோத்யா எக்ஸ்பிரஸ்.
*ரயில் வண்டி எண்கள் 22837/22838 ஹட்டியா-எர்ணாகுளம் ஏசி எக்ஸ்பிரஸ்.
*ரயில் வண்டி எண்கள் 12660/12659 ஷாலிமார் நாகர்கோவில் குருதேவ் எக்ஸ்பிரஸ்.
*ரயில் வண்டி எண்கள் 12623/12624 சென்னை திருவனந்தபுரம்- சென்னை மெயில்.
*ரயில் வண்டி எண்கள் 12697/12698 சென்னை திருவனந்தபுரம்- சென்னை மெயில் வாராந்திரி.
*ரயில் வண்டி எண்கள் 22207/22208 சென்னை திருவனந்தபுரம் -சென்னை சூப்பர் ஏசி.
*ரயில் வண்டி எண்கள் 12237/12258 யெஷ்வந்த்புர் கொச்சுவேலி - யெஷ்வந்த்புர் கரீப்ரத் எக்ஸ்பிரஸ்.
* i)ஊத்துகுளி ரயில் நிலையத்தில், கீழ்கண்ட ரயில்கள் நின்று செல்லுதல் தொடர்பான கோரிக்கைகள்:
*PGTN-TPJ ரயில் வண்டி (எண் 56712).
*CBE-MAS பகல்நேர இண்டர் சிட்டி ரயில்வண்டி (எண்கள்12680/12679).
*ரயில்வண்டி எண் 22637/22638.
*MTP-MAS இரவுநேர இண்டர் சிட்டி ரயில்வண்டி 12672/12671.
*CBE-MAS இரவுநேர இண்டர் சிட்டி ரயில்வண்டி 12674/12673.
*ii)ரயில் வண்டி (எண் 56320) CBE-NCJ இடையேயான பாசஞ்சர் வண்டி கோயம்புத்தூரில் புறப்படும் நேரம் காலை மணி ஏழு மணிக்கு மாற்றுதல் வேண்டும்.
*iii)நெய், வெண்ணெய் மற்றும் பால் பொருட்களுக்கு பிரசித்தி பெற்ற ஊத்துக்குளி ஒரு முக்கியமான வர்த்தக மையமாகும். ஊத்துக்குளி ரயில்நிலையத்தில் பயணச்சீட்டு முன்பதிவு மற்றும் புக்கிங் அலுவலகம் தேவை என வேண்டுகோள்.
5) போக்குவரத்துத் துறை
ii)விமானப் போக்குவரத்து:-
*கோவை - திருப்பூர் மக்கள் பயன் பெறும் வகையில், கூடுதல் விமான சேவைகளை துவக்கவேண்டுதல்.
*கோவை விமான நிலையத்தில் சர்வதேச விமான சேவைகளின் தொடர்பு மற்றும் சரக்கு பெட்டக முனையம் உருவாக்குதல்.
திருப்பூர் எம்.பி சத்தியபாமா அவர்கள் கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்பிய கேள்விகள்:
1.காவல் துறையினருக்கான பயிற்சிகள் மற்றும் உள்கட்டமைப்பு தொழில்நுட்ப வசதிகள்.
2.ஊனமுற்றோருக்கான ஏற்றமிகு திட்டங்கள்.
3.விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள்.
4.ராணுவ தளவாட உற்பத்தி கேந்திரங்கள், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளடக்கியும், உற்பத்தி மையம் தொடர்பான விவரங்கள்.
5.சென்னை-கோவை-சேலம்-ஈரோடு-திருப்பூர் புதிய சாலைப் போக்குவரத்து திட்டம்.
6.RGNIYD திட்டத்திற்கு நிதி ஒதுக்குதல்.
7.தமிழகத்தில் AYUSH திட்டத்திற்கான வளர்ச்சி நிதி.
8.பொதுத்துறை வங்கிகள் இணைப்பு.
9.நாட்டின் இயற்கை வளம்.
10.IGST வரி பாக்கி தொகை மாநிலத்திற்கு வழங்கல்.
சி.ஆனந்தகுமார்