புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 19 ஜனவரி 2019 (11:20 IST)

ஞானத்தாய் பிரியங்கா சோப்ரா: இங்கிலாந்தில் அடித்த லக்!

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியரின் இளைய மகன் ஹாரி கடந்த ஆண்டு மே மாதம் தனது காதலி மேகனை திருமணம் செய்துக்கொண்டார். இப்போது மேகன் கர்ப்பமாக உள்ளார். 
 
மேகனுக்கு மே மாதம் பிரசவம் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போதே முதலே பிறக்கப்போகும் குழந்தைக்கு யார் ஞானப்பெற்றோர்களாக இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்த்யுள்ளது. 
 
அதாவது கிறிஸ்தவ மத முறைப்படி குழந்தைக்கு பெயர் சூட்டும் போது குழந்தையின் ஞானத்தாய், தந்தையாக தம்பதியினர் ஒருவர் இருக்க வேண்டும். இப்போது அந்த அந்த தம்பதியினர் யார் என்பதுதான் கேள்வி.
 
அதன்படி, ஹாரியின் மூத்த சகோதரர் இளவரசர் வில்லியம், கேத் மிடில்டன் தம்பதியர் குழந்தையின் ஞானப்பெற்றோர் என கூறப்பட்டது. அதற்கு பின்னர் மேகனின் தோழி ஜெசிகா முல்ரோனியும், அவரது கணவரும் என பேசப்பட்டது.
 
ஆனால், இப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் ஞானப்பெற்றோர் ஆக அமர் வாய்ப்புள்ளது என்ற பரபரப்பு தகவ்ல் வெளியாகியுள்ளது. 
 
மேகனும் பிரியங்கா சோப்ராவும் நெருங்கிய தோழிகள் எனபது குறிப்பிடத்தக்கது. மேலும், ஹாரி - மேகன் திருமணத்தில் பிரியங்கா கலந்துக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.