செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 19 அக்டோபர் 2023 (10:27 IST)

ஆயுத பூஜை தினத்தில் சாமி சிலை, புகைப்படம் வைக்க கூடாது என அறிக்கையா? மருத்துவக் கல்லூரி விளக்கம்.

Ayudha Puja
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஆயுத பூஜையை முன்னிட்டு மதம் சார்ந்த சாமி புகைப்படமோ சிலையோ வைக்க கூடாது என அந்த கல்லூரியின் டீன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக செய்திகள் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில்  இவ்வாறு வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என மருத்துவமனை நிர்வாகம்அறிக்கை வெளியிட்டுள்ளது.  திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூலம் எந்த விதமான சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை என்றும் தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது என்றும் இது உண்மைக்கு புறம்பானது என்றும் மருத்துவமனை டீன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
 
இந்த அறிக்கை உண்மை என நம்பி பாஜகவை சேர்ந்த சிலர் கடும் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியின் டீன் இந்த விளக்கத்தை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran