இனி திரையரங்குகளில் ட்ரெய்லர்கள் வெளியிடுவது இல்லை: திருப்பூர் சுப்பிரமணியம்
இனி திரையரங்குகளில் ட்ரெய்லர்கள் வெளியிடுவதில்லை என திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் நிர்வாகி திருப்பூர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சென்னை உள்பட பல திரையரங்குகளில் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. இந்த ட்ரெய்லரை பார்க்க வந்த ரசிகர்கள் ஆவேசம் காரணமாக திரையரங்குகள் உள்ள இருக்கைகள் உள்பட திரையரங்கு பொருட்களை சேதப்படுத்தினர்.
இதுகுறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகின. இந்த நிலையில் இனி திரையரங்குகளில் டிரைலர்கள் வெளியிடுவதில்லை என முடிவு செய்துள்ளோம் என திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்
ஒரு சில திரையரங்குகளில் டிரைலர்கள் ரிலீஸ் செய்வதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதோடு திரையரங்கிலும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இனி திரையரங்குகளை டிரைலர்கள் வெளியிடுவதில்லை என முடிவு செய்துள்ளோம் என அவர் கூறியுள்ளார்.
Edited by Mahendran