திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 7 ஜூன் 2024 (11:16 IST)

அடுத்தாண்டு நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்- பாமக நிறுவனர் ராமதாஸ்!

இந்தாண்டு நீட் மறு தேர்வு நடத்த வேண்டும், அடுத்தாண்டு நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்
 
“2024ம் ஆண்டு இளநிலை மருத்துப்படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில் எந்த வகையிலும் சாத்தியமற்ற வகையில் சில மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண்கள் வாரி இறைக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது.
 
நீட் தேர்வு எதற்காக உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கங்களை நிறைவேற்றவில்லை என கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய குற்றச்சாட்டு யாருக்கும் பயனளிக்காத நீட்  நுழைவுத்தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.