வியாழன், 29 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 20 நவம்பர் 2020 (08:15 IST)

ரயில் மீது செல்ஃபி எடுக்க முயற்சி? - சிறுவன் உடல் கருகி பலி!

ரயில் மீது செல்ஃபி எடுக்க முயற்சி? - சிறுவன் உடல் கருகி பலி!
திருநெல்வேலியில் ரயில் எஞ்சின் மீது ஏறி செல்பி எடுக்க முயன்ற சிறுவன் உடல் கருகி பலியானதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஜானேஸ்வரன். நேற்று ஜனேஸ்வரன் ரயில் எஞ்சின் மீது ஏறி செல்போனில் தன்னை செல்பி புகைப்படம் எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சிறுவன் ஜானேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவன் செல்பி எடுக்கதான் ரயில் மீது ஏறினானா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.