ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 5 மே 2024 (08:48 IST)

காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் புகாரளிக்கவில்லை.. மரண வாக்குமூலமும் இல்லை: காவல்துறை

காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனக்கு மிரட்டல் இருப்பதாகவும், மரண வாக்குமூலமும் கொடுத்ததாகவும் செய்தி வெளியான நிலையில் காவல்துறை இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
 
மரணமடைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் ஏப்.30 அன்று புகார் அளிக்கவில்லை என்றும், மரண வாக்குமூலம் என்ற பெயரில் உள்ள புகார் மனு எஸ்.பி.யிடம் அளிக்கப்படவில்லை என்றும், கடந்த 2ம் தேதி தான், ஜெயக்குமாரின் மகன் ஜெஃப்ரின் தனது தந்தையை காணவில்லை என உவரி காவல்நிலையத்தில் புகாரளித்தார் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
 
மேலும் புகாரளிக்க வந்த போது தான் தனது தந்தையின் அறையில் இருந்ததாக ஜெஃப்ரின் அந்த கடிதம் காவல்துறையினரிடம் அளித்தார். அந்த கடிதத்தில் 30.4.2024 என போடப்பட்டிருந்தது, அந்த கடிதத்தை அதற்கு முன் யாரிடமும் ஜெயக்குமார் அளிக்கவில்லை.
 
அதன்பின் தனிப்படை அமைத்து விசாரித்தபோது, மே 4 அன்று காலை எரிந்த நிலையில் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டார். தற்போது வழக்கு சம்பந்தமாக 7 தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என காவல்துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Siva