1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 12 நவம்பர் 2019 (22:54 IST)

ஆவின் பால் பாக்கெட்டுக்களில் திருக்குறள்: அமைச்சர் தகவல்

கடந்த சில நாட்களாக திருவள்ளுவரை வைத்து அரசியல்வாதிகள் அரசியல் செய்தது தெரிந்ததே. திருக்குறளின் ஒரு குறளை கூட படித்திராதவர்கள் கூட திருவள்ளுவர் குறித்து பேசிய கூத்துக்களும் நடந்தது
 
இந்த நிலையில் சமீபத்தில் பாஜகவின் மாநில நிர்வாகி நிர்மல்குமார் என்பவர் தனது டுவிட்டரில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அவர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்தார். அதில் திருக்குறளை ஆவின் பால் பைகளில் அச்சிட்டு  வழங்குவதன் மூலம் ஒவ்வொரு இல்லங்களிலும் திருக்குறளை எளிமையாக கொண்டு சேர்க்க முடியும் என்றும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களின் மேலான பார்வைக்கு கொண்டு வருவதன் மூலம் இந்த கோரிக்கையை பரிசீலித்து செயல்வடிவம் கொடுக்குமாறு கேட்டு கொள்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார்
 
இதனையடுத்து இந்த கோரிக்கைக்கு பதிலளித்தஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘மிக விரைவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஒப்புதலை பெற்று ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிட்டு வினியோகிக்கப்படும் என்று பதிலளித்துள்ளார்.
 
எனவே வெகு விரைவில் பால் பாக்கெட்டுக்கள் மூலம் திருக்குறளை ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களும் படித்து தெரிந்து கொள்ளும் நாள் வெகுவிரைவில் வரும் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது