ஆடையின்றி ரோஜா குளியல் போட்ட அமலா பால் - சும்மா இருப்பார்களா ரசிகர்கள்?

papiksha| Last Updated: வியாழன், 7 நவம்பர் 2019 (12:00 IST)
“சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  அறிமுகமான நடிகை அமலா பால் பிறகு தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகிறார். 
மைனா படத்தில் நடித்து பெரும் புகழை பெற்ற அவர் தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்தார். கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த "ஆடை" திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை  பெற்றிருந்தது. 

 
இதற்கிடையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வாய் பிளக்க வைத்திடுவார். அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் மேலாடை போடாமல் பின்புறத்தில் இருக்கும் டாட்டூவை காட்டியபடி பூக்கள் நிறைந்த குளியல் தொட்டியில் போஸ் கொடுத்துள்ளார். இதை கண்ட ரசிகர்கள் "ஆடை 2 "விற்கு ரெடி ஆகிட்டீங்க போல என கிண்டலாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
இதில் மேலும் படிக்கவும் :