வியாழன், 7 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 12 நவம்பர் 2019 (08:51 IST)

கிரிக்கெட்டில் இருந்து தடை செய்தால் என்ன ? – கவனத்தை திருப்பிய ஷகீப் அல் ஹசன் !

கிரிக்கெட்டில் இருந்து தடை செய்யப்பட்டுள்ள ஷகீப் அல் ஹசன் தற்போது உள்ளூர் கால்பந்து அணியில் இணைந்துள்ளார்.

வங்கதேச அணி நிர்வாகத்தோடு சம்பள உயர்வு தொடர்பாக முரன்பட்ட வீரர்கள் ஷகீப் அல் ஹசன் தலைமையில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் அவர் சூதாட்ட புக்கிகள் அவரைத் தொடர்பு கொண்டதை ஐசிசியிடம் தெரிவிக்கவில்லை எனறு ஓராண்டு தடையும் மற்றொரு வங்கதேச அணியுடனான பிரச்சனைக்காக ஓராண்டு இடைநிறுத்த தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளார். இது பங்களாதேஷ் அணிக்கு மிகப்பெரிய இழப்பாக உருமாறியுள்ளது. இந்தியாவுக்கு எதிராக பங்களாதேஷ் அணி படுதோல்வி அடைந்ததற்கும் இதுதான் காரணம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அவர் இப்போது கால்பந்து பக்கம் தனது கவனத்தைத் திருப்பியுள்ளார். "ஃபுட்டி ஹேக்ஸ்” என்ற உள்நாட்டு அணிக்காகக் கால்பந்தாட்டம் ஒன்றில் ஆடினார். கொரியன் எக்ஸ்பாட் என்ற அணிக்கு எதிரான அந்த ஆட்டத்தில் ஷாகிபின் ஃபுட்டி ஹேக்ஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இது சம்மந்தமான புகைப்படத்தை அவர் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.