வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: வெள்ளி, 8 நவம்பர் 2019 (21:39 IST)

கையில் தேசியக்கொடி ஏந்தி, கையில் திருவள்ளுவர் சிலை கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு

கரூர் மாவட்ட ஆட்சியரிடம் கையில் தேசியக்கொடி ஏந்தி, கையில் திருவள்ளுவர் சிலை கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த தமிழ் அமைப்புகள் ! திருவள்ளுவர் சிலைகளை சேதப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் மனு அளித்தனர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கருவூர் திருக்குறள் பேரவை நிறுவனத்தலைவர் மேலை.பழநியப்பன் தலைமையில், கருவூர் தமிழ் அமைப்புகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கையில் தேசிய கொடி ஏந்தியும், கையில் திருவள்ளுவர் சிலையை ஏந்தியும் வள்ளுவருக்கு மதம், ஜாதி கிடையாது என்றும், இதை வைத்து அரசியல் செய்ய கூடாது என்றும், முழக்கமிட்டு பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் கருவூர் திருக்குறள் பேரவை மற்றும் கருவூர் தமிழ் அமைப்புகள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டு, தஞ்சை மாவடத்தில் உள்ள பிள்ளையார் பட்டியில் திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, கரூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலையை காக்க வேண்டியும் மனு அளிக்கப்பட்டது.

மேலும், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கருவூர் திருக்குறள் பேரவை நிறுவனத்தலைவர் மேலை.பழநியப்பன் கூறிய போது., ஐயன் திருவள்ளுவர் சிலையை ஆங்காங்கே காத்திட வேண்டுமென்றும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். மேலும், கருவூர் மாவட்டத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை சிமெண்ட் சிலைகள் சேதமடைந்துள்ளதால், அந்த பணிகளை எங்களிடம் கொடுத்தால் நாங்கள் பராமரிப்போம் என்றும் கூறினார்.