வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 10 டிசம்பர் 2020 (07:47 IST)

வேளாண் சட்டத்தை எதிர்க்க முதல்வருக்கு தைரியமில்லை: திருச்சி சிவா

வேளாண் சட்டத்தை எதிர்க்க முதல்வருக்கு தைரியம் இல்லை என திமுக எம்பி திருச்சி சிவா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மத்திய அரசு சமீபத்தில் வேளாண் சட்டத்தை அமல்படுத்த முயன்ற நிலையில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வட மாநிலங்களில் விவசாயிகள் டெல்லியில் மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்
 
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பல தரப்பு பேச்சு வார்த்தை நடத்தியும் பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டவில்லை
 
இந்த நிலையில் விவசாயிகள் தங்களது அடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளனர். வரும் 14ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தொடர் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக பலஜ அலுவலகங்களை மூடும் போராட்டம் செய்ய போவதாகவும் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழகத்தில் திமுக உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து வரும் நிலையில் தமிழக முதல்வர் மட்டும் வேளாண் சட்டத்திற்கு ஆதரவு கொடுத்து வருகிறார் மத்திய அரசின் வேளாண்மை சட்டத்தினால் விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு கூடுதல் நன்மை கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்து வருகிறார்
 
இந்த நிலையில் பாஜகவை எதிர்க்க  தைரியமில்லாமல் தான் புதிய வேளாண்மை சட்டங்களை முதல்வர் பழனிசாமி ஆதரிக்கிறார் என்று திமுக சிவா எம்பி குற்றஞ்சாட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது