1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 3 நவம்பர் 2018 (11:20 IST)

வெடிப்பதற்கு பதில், குடிப்பதற்கு தடை போட்டிருந்தால் 'இது நம்ம எடப்பாடி சர்கார் ' தீபாவளி!...

இந்த தீபாவளி சர்கார் தீபாவளி என விஜய் ரசிகர்கள் பேஸ்புக் பக்கத்தில் கொண்டாடி வருவதை காண முடிந்தது. அதே நேரம் நண்பர் ஒருவர், தனது பேஸ்புக் பக்கத்தில்,  இந்த 2 மணி நேரத்தில் தான் வெடிக்க வேண்டும் என தடை போட்ட அரசு, இந்த 2மணி நேரத்தில் தான் குடிக்க வேண்டும் என தடை போட்டிருந்தால் ... இந்த தீபாவளி தான் எடப்பாடி சர்காரின் தீபாவளியாக இருந்திருக்கும் என போட்டிருந்தார்.

உண்மையில், தீபாவளி பண்டிகையை இன்றைய இளைய தலைமுறையினர் பலர்,  வெடித்து கொண்டாடுவதைவிட, குடித்து கொண்டாடி வருவதை பெரிதும் விரும்புகிறார்கள் என்பது கசப்பான உண்மை.  எனவே வெடிப்பதற்கு தடை போடுவதைவிட குடிப்பதற்கு தடை போட்டால் தான் இது நம்ம சர்கார் தீபாவளி!  அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...!