செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 22 செப்டம்பர் 2019 (19:00 IST)

நடிகையை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்ததாக வாலிபர் மீது வடபழனி போலீசில் புகார்

சென்னை வடபழனி பகுதியில் வசித்து வரும் குறும்பட நடிகை ஒருவர், காவல் நிலையத்தில் தன்னை பக்ரூதீன் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டுவதாக புகார் ஒன்றை அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
இதுகுறித்து அந்த புகாரில் குறும்பட நடிகை கூறியிருப்பதாவது: புழல் பகுதியை சேர்ந்த பக்ருதீன் என்பவர் தன்னை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
 
 
இந்த நிலையில் பக்ரூதீனிடம் போலீசார் விசாரித்ததில், அந்த குறும்பட நடிகை தன்னிடம் ஒன்றரை லட்சம் பணம் வாங்கியிருப்பதாகவும், பணத்தை திருப்பி கேட்டதற்காக தன் மீது பொய்யான புகார் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். 
 
 
இந்த நிலையில் குறும்பட நடிகை மீது பண மோசடி புகாரும், பக்ருதீன் மீது பாலியல் புகாரையும் போலீசார் பதிவு செய்து இரண்டு வழக்குகளையும் விசாரணை நடத்தி வருகின்றனர்.