ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 27 மார்ச் 2023 (16:27 IST)

மேலும் 3 வழித்தடங்களில் சென்னை மெட்ரோ: சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க முடிவு..!

சென்னை மெட்ரோ ரயில் ஏற்கனவே விமான நிலையத்திலிருந்து கோயம்பேடு வழியாக சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் சென்னை விமான நிலையத்திலிருந்து சென்ட்ரல் வழியாக விம்கோ நகர் ஆகிய பகுதிகளுக்கு ரயில்களை இயக்கப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் தற்போது கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி பைபாஸ் வரை அடுத்த கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் மேலும் மூன்று வழித்தடங்களை நீடிப்பது குறித்த ஆலோசனையின் நடைபெற்ற வருகிறது. இது குறித்த சாத்தியகூறு அறிக்கை தயாரிக்க மூன்று நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 
 
முதல் கட்டமாக திருமங்கலம் - ஆவடி, பூந்தமல்லி - பரந்தூர் மற்றும் சிறுசேரி - கிளாம்பாக்கம் ஆகிய வழித்தடங்களை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பரந்தூரில் புதிய விமான நிலையமாக அமைய இருப்பதை அடுத்தும், கிளாம்பாகத்தில் புதிய பேருந்து நிலையம் அமைந்திருப்பதை அடுத்தும், இந்த பகுதிகளுக்கு மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva