புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 7 ஜனவரி 2020 (08:22 IST)

தமிழகத்தில் மேலும் 3 மாவட்டங்கள்: இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஐந்து புதிய மாவட்டங்கள் உருவான நிலையில் இந்த ஆண்டு 3 புதிய மாவட்டங்கள் உருவாக இருப்பதாகவும் இதனை அடுத்து தமிழகத்தில் மொத்தம் 40 மாவட்டங்கள் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன 
 
தமிழகத்தில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் 32 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் அதனை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டம் என்ற புதிய மாவட்டமும், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி என்ற புதிய மாவட்டமும், நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசி என்ற புதிய மாவட்டமும் உருவாகின.
 
அதேபோல் வேலூர் மாவட்டம் வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை என மூன்றாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. இதனை அடுத்து தற்போது மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிர்வாக காரணங்களுக்காகவே மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன என தமிழக அரசு விளக்கம் அளித்தது 
 
இந்த நிலையில் தற்போது மேலும் மேலும் மூன்று மாவட்டங்களை புதிதாக உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது சேலம் மாவட்டத்திலிருந்து எடப்பாடி என்ற தனி மாவட்டம் உருவாக இருப்பதாகவும், அதேபோல் கோவை மாவட்டத்தில் இருந்து பொள்ளாச்சி என்ற புதிய மாவட்டம் உருவாக இருப்பதாகவும், தஞ்சை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை என்ற தனி மாவட்டம் உருவாக இருப்பதாகவும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
 
தற்போது சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்த கூட்டத் தொடரிலேயே இந்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது