வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 6 ஜனவரி 2020 (15:31 IST)

சீனியர் vs ஜூனியர்: தலைவர் பதவிக்கு பாஜகவில் மோதல்?

பாஜக மேலிடம் சீனியர்களுக்கு பதவி கொடுப்பதா? அல்லது இளைஞர்களுக்கு பதவி கொடுப்பதா? என்ற குழப்பத்தில் உள்ளதாம். 
 
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டார். இதனை அடுத்து ஒரு சில மாதங்களாக தமிழக பாஜகவின் தலைவர் பதவி காலியாக உள்ளது.
 
தமிழக பாஜகவின் புதிய தலைவராக எச் ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், இல கணேசன், வானதி ஸ்ரீனிவாசன், சி பி ராதாகிருஷ்ணன், கேடி ராகவன் உள்பட பலர் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஜனவரி முதல் வாரத்தில் தமிழக பாஜக தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தனர்.
 
இந்நிலையில், பாஜக மேலிடம் சீனியர்களுக்கு  பதவி கொடுப்பதா? அல்லது இளைஞர்களுக்கு பதவி கொடுப்பதா? என்று ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அனுபவம் வாய்ந்தவர்களை ஆலோசனைக்காக மட்டும் கட்சியில் வைத்துக்கொண்டு பதவியை இளைஞர்களுக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும் என பாஜக மேலிடம் தரப்பில் கணக்கு போடப்பட்டுள்ளதாம். 

ஆனால் சீனியர்களுக்கு பதவி கொடுக்காமல் கட்சியில் உள்ள ஜூனியர்களுக்கு பதவியை போட்டுக்கொடுத்தால் கட்சிக்குள் மனக்கசப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிகிறது. 
 
இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் பட்சத்தில் அந்த பட்டியலில்  கோவையை சேர்ந்த பாஜ தேசிய இளைஞர் அணி துணை தலைவர் ஏ.பி.முருகானந்தத்திற்கு பதவி வழங்கப்படலாம் என தெரிகிறது.