1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. three constituiences to ops team in bjp alliance

ஓபிஎஸ்-க்கு 3 தொகுதிகள், 1 ராஜ்ய சபா.. தாமரை சின்னத்தில் போட்டியிடுவாரா?

தாமரை
பாஜக கூட்டணியில் போட்டியிடும் ஓபிஎஸ் அணிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் அதுமட்டுமின்றி ஒரு ராஜ்யசபா தொகுதியும் தருவதாக பாஜக வாக்குறுதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது 
 
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் அணி இணைந்து போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
என்னதான் அவர் நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவேன் என்று கூறினாலும் அவருக்கு தாமரை சின்னத்தில் போட்டியிட மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தேனி, மதுரை மற்றும் தஞ்சாவூர் ஆகிய தொகுதிகள் ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
அதுமட்டுமின்றி ஓபிஎஸ் மகனுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படும் என்றும் ஒருவேளை நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து விட்டாலும் தனது மகன் பாராளுமன்றத்திற்கு செல்வது உறுதி என்றும் ஓபிஎஸ் தனது தரப்பிடம் கூறி வருவதாக தெரிகிறது. 
 
இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருப்பதாகவும் எப்படியாவது அந்த சின்னத்தை பெற்று விட வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
எல்.முருகனை விமர்சிப்பதா.? டி.ஆர்.பாலு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.! அண்ணாமலை..!!