வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 16 மார்ச் 2023 (23:48 IST)

துணைமுதல்வரின் மனைவிக்கு மிரட்டல் விடுத்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் கைது

மஹாராஷ்டிர மாநில துணைமுதல்வரின் மனைவி அம்ருதாவுக்கு மிரட்டல் விடுத்த பெண் ஆடை வடிவமைப்பாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மராட்டிய  மா நிலத்தில் முதல்வர் ஹிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இம்மா நிலத்தில் துணைமுதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியிலுள்ளார்.

இந்த நிலையில், பிரபல நகை மற்றும் ஆடை வடிவமைப்பாளரான அனீஷா ஜெய்சிங்கானி என்பவர்  துணைமுதல்வரின் மனைவி அம்ருதாவுக்கு ரூ.1 கோடி கொடுக்கவுள்ளதாகக் கூறி மிரட்டலும் விடுத்ததாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் அனீஷாவுடன் தனக்கு 16 மாதங்கள் தொடர்பில் இருந்தபோது, அவரது தந்தையைக் குற்றவழக்கில் இருந்து விடுவிப்பதற்கு லஞ்சம் கொடுப்பதாகக் கூறி, மிரட்டலும் விடுத்ததாகக் கூறியுள்ளார்.

அம்ருதாவுக்கு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் அனிஷாவின் தந்தை ஜெய்சிங்கானிக்கும் தொடர்புள்ளதாக போலீஸில் புகார் அளித்த பின் அவர்கள் பதிவுசெய்த எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில்  அனீஷாவை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். ஏற்கனவே அவரது மகனைக் கைது செய்து விசாரித்து வரும் நிலையில், ஜெய்சிங்கானியை போலீஸார் தேடி வருகின்றனர்.