செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: சனி, 28 செப்டம்பர் 2019 (13:04 IST)

''தமிழைப் படிக்காதவர்கள் இனி வெற்றி பெற முடியாது” - ராமதாஸ்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வில் முதல்நிலைத் தேர்வின் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாகவும், மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று தகவல் வெளியானது.
இதற்கு ,தமிழகத்தில் சர்ச்சைகள் எழுந்த நிலையில், டிஎன்.பி.எஸ்சி செயலர் நந்தகுமார் விளக்கம் அளித்தார். 
 
அதில், ’தமிழ் அல்லது ஆங்கிலம் நீக்கப்பட்டு தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் முதல்நிலை பாடத்திட்டத்தில் இரண்டு பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகதவும், முதல் நிலை தேர்வில் நீக்கப்பட்ட பொதுத்தமிழ் மற்றும் ஆங்கிலப் பகுதிகள் எல்லாம் மெயின் தேர்வு எனப்படும் எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது எனவும், இந்த முதல்நிலை தேர்வில் பாடத்திட்டத்தில் தமிழர்களின் வரலாறு. சுதந்திரப் போராட்ட காலத்தில் தமிழகத்தின் பங்கு மற்றும் தமிழக அரசியல் கட்சிகளில் தோற்ற ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளதாகவும்’ அவர் கூறியுள்ளார்.
 
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் டி.என்.பி.எஸ்.சியின் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
 
1. ’டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ள தொகுதி-2 முதனிலை தேர்வில் பொதுத்தமிழ் தாள் நீக்கப்பட்டாலும் அதில் கேட்கப்படும் வினாக்கள்  முதனிலை மற்றும் முதன்மைத் தேர்வில் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியங்கள், திருக்குறள் என தமிழ் சார்ந்த பகுதிகள் இத்தேர்வுகளில் அதிகரிக்கப்பட்டுள்ளன.
 
2. தமிழக அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்கள், தமிழைப் படிக்காதவர்கள் இனி வெற்றி பெற முடியாது என்ற நிலையை டி.என்.பி.எஸ்.சி. ஏற்படுத்தியுள்ளது. இது தமிழக மாணவர்களுக்கு சாதகமானதாக அமையும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு பாராட்டுகள்.... தமிழ் வாழ்க!’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.