வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 13 ஜூன் 2019 (12:51 IST)

தல ஆல்வேஸ் மாஸ்! "நேர்கொண்ட பார்வை" ட்ரைலரை புகழ்ந்த நயன்தாரா!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகிவரும்  ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ட்ரைலர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகி 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து நம்பர் 1 ட்ரெண்டிங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது.   
 
இந்த ட்ரைலர் வெளியீட்டால் அஜித்தின் ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த திரைபிரபலன்களையும் பிரம்மிப்படையவைத்துள்ளது. ட்ரைலரில் அஜித் பேசிய வசனங்களும், அவரது நடிப்பும் வேற லெவலில் இருக்கிறது. என்று பல்வேறு நடிகர்களும் தங்களது கருத்துக்களை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை நயன்தாரா நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலரை பார்த்துவிட்டு ட்விட்டரில் கமெண்ட் செய்துள்ளார். 



 
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நயன்,‘நேர்கொண்ட பார்வையின் முக்கிய அம்சமே அஜீத்தின் அடர்த்தியான நடிப்பு என்பதை  இந்த ட்ரைலர் தெரிவிக்கிறது.  எப்போதும் போல தல இந்த படத்திலும் சிறப்பாக இருக்கிறார். அனைத்து ரசிகர்களுக்கு ஒரு விருந்து காத்துக்கொண்டிருக்கிறது என்று நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.